திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு! திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பு விரைவில் வெளியீடு!
திருக்குறள் உடனாகிய திருக்குரல்
உலகப் பொதுமறை - ஆன்ம உரை

திருக்குறள் உடனாகிய திருக்குரல்

ஆன்ம உரை

உடல்கள் எண்ணிலடங்காதவை என்றாலுங்கூட ஆன்மா ஒன்றே! அதுபோலவே, உரைகள் எத்தனை எத்தனை ஆயினும் ஆன்ம உரை ஒன்றே!

அழிவு இல்லாதது ஆன்மா மட்டுந்தான். ஆதலால்தான், உண்மை உரை ஆன்ம உரை என்றானது.

உருவா 1,300 உருவா 1,500 13% சலுகை
திருக்குறள் உடனாகிய திருக்குரல்

யாருக்கு?

எப்பாலவர்க்கும் முப்பால்!

குழந்தைப் பருவம் முதல் வயோதிகப் பருவம் வரை மட்டுமன்று;

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரை மட்டுமன்று;

ஓருலகம் முதல் ஈருலகம் வரை மட்டுமன்று;

ஏழு படிநிலைகளுக்கும் உரியதை வழங்கும் நூல் இது!

புல் தொடங்கி ஆண்டவன் நிலை வரை ஆட்சி செய்யும் நூல் இது!

  1. 1 குழந்தை → வயோதிகம் பருவமெல்லாம் கடந்தும் — மட்டுமன்று
  2. 2 ஓரறிவு → ஆறறிவு உயிரினம் முழுமைக்கும் — மட்டுமன்று
  3. 3 ஓருலகம் → ஈருலகம் உலகங்களைத் தாண்டியும் — மட்டுமன்று
  4. 4 ஏழு படிநிலைகள் அனைத்து நிலைகளுக்கும் உரியதை வழங்கும் நூல்
  5. 5 புல் → ஆண்டவன் ஆட்சி செய்யும் நூல் இது

வாசகர்களின் திருக்குரல்!

ஆன்ம உரையை அளவளாவி ஆனந்தம் பெற்றோரின் திருக்குரலைக் கேளுங்கள்...

வாசகர்களின் திருக்குரல்!

ஆன்ம உரையை அளவளாவி ஆனந்தம் பெற்றோரின் திருக்குரலைப் படியுங்கள்...

குறளைப் படிக்கும்போதே உள்ளம் அமைதியடைகிறது. விளக்கம் அல்ல — உணர்வு.
கவிதாசென்னை
பழமையான வரிகள் இன்றைய வாழ்க்கைக்கு நெருக்கமாகின. மெதுவாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
அருண்கோயம்புத்தூர்
ஒவ்வொரு பக்கமும் ஒரு தியானம் போல. வீட்டில் வைத்திருக்க வேண்டிய பதிப்பு.
மீனாமதுரை
ஆன்ம உரை என்ற அணுகுமுறை மனதைத் தொடுகிறது. பாடப்புத்தகம் போல இல்லை.
பிரியாஈரோடு
எழுத்து தெளிவாக இருப்பதால் வீட்டிலுள்ள பெரியவர்களும் வசதியாகப் படிக்கிறார்கள்.
லதாதஞ்சாவூர்
பொருள் பகுதி என் தொழிலுக்கும் பயன்படுகிறது. தலைமை பற்றிய குறள்கள் அருமை.
அனிதாதிருப்பூர்
இன்பத்துப்பால் விளக்கம் மிக நாசூக்காகவும் அழகாகவும் இருக்கிறது.
திவ்யாநாகர்கோவில்
பள்ளியில் மனப்பாடம் செய்த குறள்களின் உண்மையான பொருள் இப்போதுதான் புரிந்தது.
ரமேஷ்திருச்சி
எளிய தமிழ். ஒவ்வொரு குறளுக்கும் தெளிவான விளக்கம். தினமும் ஒரு குறள் படிக்கிறேன்.
சரண்யாசேலம்
அப்பாவுக்குப் பரிசாக வாங்கினேன். இப்போது தினமும் காலையில் இதைத்தான் படிக்கிறார்.
விக்னேஷ்திருநெல்வேலி
வேலை அழுத்தத்துக்கு நடுவே ஐந்து நிமிடம் ஒரு குறள் படித்தால் மனம் தெளிவாகிறது.
கார்த்திக்பெங்களூரு
குழந்தைகளுக்கு அறம் பகுதியை எளிமையாகச் சொல்லிக் கொடுக்க முடிகிறது.
செந்தில்வேலூர்
ஊரை விட்டு வெளியே இருக்கும் எனக்கு தமிழோடு மீண்டும் தொடர்பு தந்த புத்தகம்.
பாலாஜிசிங்கப்பூர்
எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கத் தொடங்கலாம். அதுவே இதன் பெரிய பலம்.
முருகன்புதுச்சேரி

மறைத் தெளிவு!

குறள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உள்ளே இறங்குவது சிலருக்கே.

ஆன்ம உரை என்பது திருக்குறளின் வரிகளை உள்ளத்தோடு இணைக்கும் ஆன்மீக உரை. பாடப்புத்தக விளக்கம் அல்ல — வாழ்க்கைக்குள் நிற்கும் குறளின் குரல். திருமுருகனின் பார்வையில் அறம், பொருள், இன்பம் மீண்டும் உயிர்பெறுகின்றன.

01

மறுபிறவி!

திருக்குறள் உறுதியாக மறுபிறவியை உணரச் செய்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. திருக்குறளில் அடியேன் அருளிய ஆன்ம உரையில் மறுபிறப்புக் குறித்தான கருத்துக்களை வாசிக்கும்போது உங்களுக்கு வேறுவிதமாகத் தோன்றலாம். அடியேன் இதற்கு வள்ளலாரைச் சான்று காட்ட விரும்புகிறேன்:

துறவி ஒருவர் சாலையில் போகிற மனிதர்களை எல்லாம் ஒவ்வொருவராகத் தரம் பிரித்து ஒவ்வொருவரையும் பலவாறு சொல்லி அழைக்கிறார். "இதோ! நாய் போகிறது! இதோ! பன்றி போகிறது!" என்று. ஆனால், வள்ளலாரைப் பார்த்து மட்டும் "இதோ! மனிதர் போகிறார்!" என்றார். அதாவது, அவர் நாய் என்றும் பன்றி என்றும் அழைத்தது உருவத்தில் மனிதர்களாகவும் குணத்தில் நாயாகவும் பன்றியாகவும் இருப்பவர்களைக் கண்டே! அதை முற்பிறவி என்றும் சொல்லலாம். அதாவது, போன பிறவியில் நாயாகப் பிறந்தார் என்றும் பன்றியாகப் பிறந்தார் என்றும் கருதிக்கொள்ளலாம் அல்லது, தற்போது அவ்வாறான வாழ்க்கையை வாழ்கிறார் என்றும் உணர்ந்துகொள்ளலாம். வள்ளலாரை மனிதர் என்று அவர் அழைத்ததற்குக் காரணம் முற்பிறவியில் அவர் மனிதராக இருந்ததால்தான் இந்தப் பிறவியில் மனிதராகப் பிறந்துள்ளார் என்ற நோக்கிலும், போன பிறவியைப் பற்றிக் கவலையில்லை; இந்தப் பிறவியில் அவர் மனிதராக இருக்கிறார் என்ற நோக்கிலும் எடுத்துக்கொள்ளலாம்.

முற்பிறவியைப் பிறப்பு என்று தனித்து எண்ணினால் அது சுற்றி இருப்பவர்களை அணைத்துக்கொள்ளாது. ஆனால், முற்பிறவியைக் குணத்துடன் எண்ணினால் அது சுற்றி இருப்பவர்களையும் அணைத்துக்கொள்ளும். ஒரே வனத்தில் வாழும் புலி, மானைப்போன்றே ஒரே பிறவியில் மனிதர் வேடத்தில் நாயும் பூனையும் வாழ்கிறது; மானுடமும் வாழ்கிறது என்பதைப்போல்! ஆதலால், அடியேன் முற்பிறவியைச் சகப்படிநிலைகளோடு பொருத்தி அமைத்துள்ளேன்.

02

ன்!

"அநேகமாகக் குறள்களில் அவன் என்று வந்து ஆடவரையே குறிக்கிறது. அவ்வாறெனில் பெண்? இது ஆதிக்கம் இல்லையா?" என்று நீங்கள் வினவலாம். அவன் என்பது பெண்ணால் ஆட்கொள்ளப்பட்ட வடிவமே என்பது ஆன்மக் கருத்து. இறைவனை எவ்வாறு ஆன்ம நோக்கில் ஆண் என்று தனித்து எண்ண இயலாதோ அதுபோல்தான் பல குறள்களில் இடம்பெற்றுள்ள அவன், ஒருவன் என்பதெல்லாம்.

இறைவன் என்பவன் ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்ற எவற்றுள்ளும் அடக்க இயலாதவன். உணர்வுரீதியிலேயே அவ்வாறான வடிவங்களில் எழுந்து அருள்கிறான். இறைவனுக்குப் பாலினம் இல்லை; உயிரின் வகையினம் இல்லை; உயிர் உள்ளது இல்லை; உயிர் அற்றதும் இல்லை. ஆதலால், படித்து உணரும் திறன் பொறுத்து அதாவது இடம், பொருள், ஏவல் பொறுத்து உணர்ந்துகொள்க!

03

ஏகினான்?

ஏகுவான் என்று எதிர்காலத்தை உணர்த்தாமல் ஏகினான் என்று கடந்த காலத்தை உணர்த்தி வரக் காரணம்? முக்காலமும் திட்டமிட்டு வினைகளை ஆற்றுபவர்க்கு உண்டே தவிர எதையும் கருதாமல் நல்ல வினைகளை ஆற்றுபவர்க்கு இல்லை. ஆதலால்தான், ஏகினான் என்று வந்துள்ளது. இதை உணர்தல் வழியாக உட்கொள்க! சொல்லப்போனால், இதுதான் ஞானத்தின் அற்புதமான நிலை; ஞானியர்க்கும் குருவான நிலை.

முப்பால்

திருக்குறள் வாழ்வின் மூன்று தளங்களைப் பேசுகிறது — அறம், பொருள், இன்பம். ஆன்ம உரையில் ஒவ்வொன்றும் இவ்வாறு விளங்குகிறது.

01 38 அதிகாரங்கள்

அறம்

உண்மையான வாழ்வே அறம்

எவ்வகையான அதிகாரத்தாலும் ஆள முடியாததை, அன்பினால் எளிதாக அடையக்கூடியதை 'இறைவன்' என்று கூறுவதைப்போல், உலகில் ஆகச்சிறந்த ஒன்றை 'இயற்கை' என்று கூறுவதைப்போல், உண்மையான வாழ்வை 'அறம்' என்று கூறுதல் சாலச்சிறந்தது.

  • அன்பினால் அடையும் இறைவன்
  • ஆகச்சிறந்தது இயற்கை
  • உண்மையான வாழ்வே அறம்
02 70 அதிகாரங்கள்

பொருள்

அறத்தின் நேரடி விளைபொருள்

அறத்தின் நேரடி விளைபொருள். அறம் என்பது உயிர் என்றால், இயங்க வல்ல இன்றியமையாத உடல் உறுப்புக்களே பொருள் ஆகும். குடிகளுக்கும் முடிகளுக்கும் முழுமூச்சாகப் பாதுகாப்பையும், அதன் வழியாக இன்பத்தையும் தந்து தன்னிறைவு பெற வைப்பதாகப் பொருள் விளங்குகிறது. அதாவது, கழியும் நாட்களின் உயிர் வளியே பொருளாகும்.

  • உயிருக்கு உடலாகும் பொருள்
  • குடி · முடி பாதுகாப்பு
  • கழியும் நாட்களின் உயிர் வளி
03 25 அதிகாரங்கள்

இன்பம்

வீட்டிற்கான வழி

அறம் மற்றும் பொருள் என்னும் இரண்டின் வழியாக விளையும் பெரும் பகுதியே இன்பம். இதைக் கடந்தே வீடு என்னும் நிலையை அடைய இயலும். ஆதலால் வள்ளுவரின் மறை, இன்பத்துடன் தன்னை நிறைவு செய்கிறது என்று கூறாமல் வீட்டிற்கான வழியைச் சுட்டிக்காட்டுகிறது என்றுதான் கூற வேண்டும். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வோர் எழுத்தும் உணர்தல் நிலைதான். ஆகவே, எழுத்துக்களுக்கு இன்பத்தைத் தரும்பொருட்டு எழுத்து வடிவாக எழுந்த பகுதியே இன்பத்துப்பால்.

இன்பம் என்பது, அதாவது செயல் இயல்பானது மட்டுமின்றி அந்தச் சொல்லும் இயல்பானதே! பக்தி, சரணடைதல், அன்பு, சினம் என நூற்றுக்கணக்கான சொற்களைக் காமம் எனப்படும் இன்பத்தில் பொருத்தலாம். ஆயினும், ஊழியில் காமம்(இன்பம்) என்பது அருவருப்பான ஒன்றாக மாறிப்போனது. இன்பத்தில் அறத்தைப்பொருத்துச் சிற்றின்பம், பேரின்பம் என்று விளங்குவதைப்போலவே இன்பத்திலும் முறைமை, முறையற்றது என்று உள்ளதுதான். அற உலகில் இயல்பான ஒன்று ஊழியில் இயல்புக்குமீறியதாகப் போய்விட்டது.

  • அறம் · பொருள் வழி இன்பம்
  • சிற்றின்பம் · பேரின்பம்
  • முறைமை · முறையற்றது
புத்தகத்தின் போக்கு

கற்கும் முறை

திருக்குறள் பயணத்தின் முடிவில் நீங்கள் பெறுவது?

மரணம் இல்லாப் பெருவாழ்வு.

மனப்பாடம் அல்ல — புரிதல். மூன்று எளிய படிகளில் குறள் உங்கள் வாழ்வின் பகுதியாகிறது.

  1. 1

    குறள்

    மூல வரிகளின் அழகை உணர

  2. 2

    உரை

    எளிய ஆன்ம விளக்கம்

  3. 3

    வாழ்க்கை

    இன்றைய வாழ்வில் பயன்பாடு

உடல்கள் பலவாயினும் ஆன்மா ஒன்று. உரைகள் எத்தனை இருந்தாலும் ஆன்ம உரை ஒன்றுதான்.

பயணம்

மரணம் இல்லாப் பெருவாழ்வு - பயணம்!

இதுவரை வந்த உரைகளை விமர்சனம் செய்தோ, ஆய்வுகள் செய்தோ இவ்வுரை எழுதப்படவில்லை. அதேபோல், வெறுமனே உரை ஆசிரியர்களின் பட்டியலில் இடம்பெறுவதும் அடியேனின் நோக்கமில்லை.

நெருடலான உரையை உலகம் நெருடலான குறள் என்று பிம்பம் செய்ததன் விளைவுதான் இவ்வுரையின் பிறப்பு! (குறள் எண் 402 இன் உரை அவ்வாறே எழுந்தருளியது.)

'எந்தச் சூழ்நிலையிலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்ற சதியில் இருந்து 'அறத்தைக் கடைபிடிக்கும் சூழ்நிலை' என்ற விதிக்கு இடம்பெயரச் செய்கிறது இவ்வுரையின் பயணம்.

13% சலுகை சிறப்பு விலை

இப்பொழுதே புத்தகத்தைப் பெறுங்கள்!

உருவா 1,300 உருவா 1,500

சேமிப்பு உருவா 200

  • அசல் பதிப்பு
  • தூது அஞ்சல் உங்கள் பரிந்துரையின்படி அனுப்பி வைக்கப்படும். (இந்திய அஞ்சல், ST, DTDC, PROFESSIONAL)
  • பாதுகாப்பாகப் பொதி ஆக்குதல்.
  • உங்கள் கைகளில் ஒப்படைக்கப்படும்.
  • எளிய ரிட்டர்ன் கொள்கை

அனைத்தும் உட்பட · நேரடி checkout

புத்தக விவரங்கள்

வடிவம்
தாள் பதிப்பு
புத்தக அளவு
6.5 × 9.5
அட்டை தரம்
கெட்டி அட்டை (மேற்கூரை உட்பட)
பக்கங்களின் எண்ணிக்கை
943
தாள் தரம்
வழுவழுப்புத் தாள்

கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படுவன

இந்தப் புத்தகம் யாருக்கு?

திருக்குறளை ஆன்மீகப் பார்வையுடன் வாசிக்க விரும்பும் அனைவருக்கும் — மாணவர் முதல் தேடுபவர் வரை.

எப்படி வாங்குவது?

“புத்தகம் வாங்க” அழுத்தினால் புத்தகம் கூடையில் சேர்ந்து நேரடியாக checkout பக்கத்திற்குச் செல்லும்.

டெலிவரி எத்தனை நாளில்?

ஆர்டர் உறுதிப்படுத்திய பின் உங்கள் முகவரி அடிப்படையில் டெலிவரி நாட்கள் தெரியும்.

மொழி என்ன?

புத்தகம் முழுவதும் தமிழில். இணையதளத்தில் தமிழ் / English மாற்றிப் பார்க்கலாம்.

பணம் பாதுகாப்பா?

ஆம். பாதுகாப்பான கட்டண முறைகள் மூலம் ஆர்டர் செய்யலாம்.

திருக்குறள் தெரியாதவர்களும் படிக்கலாமா?

நிச்சயமாக. எளிய தமிழில் எழுதப்பட்டிருப்பதால் தொடக்கநிலை வாசகர்களுக்கும் இது ஏற்றது.

தினமும் எவ்வளவு நேரம் வாசிக்க வேண்டும்?

தினமும் சில நிமிடங்கள் போதும். ஒரு குறள், ஒரு சிந்தனை — எங்கிருந்தும் தொடங்கலாம்.

அயலகத்திற்கு அனுப்பப்படுமா?

உறுதியாக அனுப்பலாம். நாடுகள் பொறுத்தும் பொதியின் எடை பொறுத்தும் தொகை மாறுபடும். ஆகையால், நீங்கள் பகிரி வழியாகச் செய்தி அனுப்புங்கள். அதிகபட்சம் ஒருநாளில் உங்களுக்கு விடை கிடைக்கும்.

மொத்தமாக வாங்கினால் சலுகை உண்டா?

உறுதியாக உண்டு. பிரதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் பரிசளிக்கும் நோக்கம் பொறுத்தும் யாருக்குப் பரிசளிக்கிறோம் என்பதைப் பொறுத்தும் சலுகையில் முன்னுரிமை உண்டு. ஏனெனில், இது அறத்துடன் கூடிய வணிகம்.

நன்கொடை எதற்கு?

விலையின் காரணமாக ஒருவர் வாங்காமல் இருக்கிறார் என்றால் அது இந்நூலின் நோக்கத்தை அதிரச் செய்யும். ஆதலால், சூழல் பொறுத்து அநேக நேரங்களில் வெறும் அச்சுக் கூலியை மட்டுமே பெற்றுக்கொண்டு நூல் தரப்படுகிறது. சிலநேரங்களில் அச்சுக் கூலிக்கு குறைவாகவும் நூல் தரப்படுகிறது. இதை ஈடுசெய்யவே நன்கொடை என்பது தரப்பட்டுள்ளது. நீங்கள் சூழல் பொறுத்து அளிக்கும் நன்கொடை விற்பனையின் ஏற்ற இறக்கங்களைச் சற்றே சரிசெய்யும். இது, இந்நூலை இத்தொகை கொடுத்து வாங்க இயலாதவர்க்கு நீங்கள் வாங்கச் செய்யச் செய்யும் மறைமுகமான உதவி ஆகும்.

இணையதளத்தின் வழியாக மட்டுந்தான் புத்தகத்தைப் பெற முடியுமா?

ஆசிரியரைத் தொடர்புகொண்டும் நூலைப் பெறலாம். அவருடைய பகிரி எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்புங்கள். தங்களுடைய முகவரி பெறப்பட்டு நூல் அனுப்பி வைக்கப்படும்.

எத்தனை நாட்களில் நூல் வந்துசேரும்?

விடுமுறை நாட்கள் தவிர்த்து 4 வேலை நாட்களில் நூல் உங்களை வந்தடையும்.

ஆசிரியர் பதிலளிப்பார்

Shopping Cart (0)

Your cart is empty

Start Shopping

Wishlist (0)

Your wishlist is empty

Start Shopping